6- வகுப்பு
தமிழ்
பருவம் -3
இயல் 1: புதுமைகள் செய்யும் தேசமிது
1.1. பாரதம் அன்றைய நாற்றங்கால்
I. சொல்லும் பொருளும்
- மெய் – உண்மை
- தேசம் – நாடு
II. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக
1. “தேசம் உடுத்திய நூலாடை” எனக் கவிஞர் குறிப்பிடும் நூல் ______________________
- திருவாசகம்
- திருக்குறள்
- திரிகடுகம்
- திருப்பாவை
விடை : திருக்குறள்
2. காளிதாசனின் தேனிசைப் பாடல்கள் எதிரொலிக்கும் இடம் ______________________
- காவிரிக்கரை
- வைகைக்கரை
- கங்கைக்கரை
- யமுனைக்கரை
விடை : காவிரிக்கரை
3. கலைக்கூடமாகக் காட்சி தருவது ______________________
- சிற்பக்கூடம்
- ஓவியக்கூடம்
- பள்ளிக்கூடம்
- சிறைக்கூடம்
விடை : சிற்பக்கூடம்
4. “நூலாடை” என்னும் சொல்லைப் பிரித்து எழுதக்கிடைப்பது ______________________
- நூல் + ஆடை
- நூலா + டை
- நூல் + லாடை
- நூலா + ஆடை
விடை : நூல் + ஆடை
5. “எதிர் + ஒலிக்க” என்பதைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ______________________
- எதிரலிக்க
- எதிர்ஒலிக்க
- எதிரொலிக்க
- எதிர்ரொலிக்க
விடை : எதிரொலிக்க
1.2. தமிழ்நாட்டில் காந்தி
I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக
1. காந்தியடிகளிடம் உடை அணிவதில் மாற்றத்தை ஏற்படுத்திய ஊர்
- கோவை
- மதுரை
- தாஞ்சாவூர்
- சிதம்பரம்
விடை : மதுரை
2. காந்தியடிகைள் எந்தப் பெரியவரின் அடிநிழலில் இருந்து தமிழ கற்க வேண்டும்
என்று விரும்பினார?
- நாமக்கல் கவிஞர்
- திரு.வி.க.
- உ.வே.சா.
- பாரதியார்
விடை : உ.வே.சா.
II. பொருத்துக
- இலக்கிய மாநாடு – பாரதியார்
- தமிழ்நாட்டுக் கவிஞர் – சென்னை
- குற்றாலம் – ஜி.யு.போப்
- தமிழ்க்கையேடு – அருவி
விடை : 1 – ஆ, 2 – அ, 3 – ஈ, 4 – இ
III. சொற்றொடரில் அமைத்து எழுதுக
- ஆலோசனை – அரசருக்கு அமைச்சர் ஆலோசனை வழங்கிடுவார்
- பாதுகாக்க – படை வீரர்கள் நாட்டை பாதுகாக்க எல்லையில் போராடி வருகின்றன
- மாற்றம் – பச்சோந்தி தன் இடத்திற்கு ஏற்ப நிற மாற்றம் செய்து கொள்ளும்
- ஆடம்பரம் – ஆரம்பர மனித வாழ்க்கையினை அழிக்க வல்லது
No comments:
Post a Comment