தமிழக சத்துணவு மையத்தில் வேலை வாய்ப்பு!
திருவாரூர் மாவட்ட சத்துணவு மையங்களில்
11 சமையல் உதவியாளர் பணியிடங்கள் நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
10-ம் வகுப்பு படித்தவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்க இது தான்
கடைசி வாய்ப்பு – தேர்வு முறை, தகுதி விவரங்கள் எல்லாம் எளிமையாக அறிவிக்கப்பட்டுள்ளது.
உங்களுக்கோ அல்லது தெரிந்தவர்களுக்கோ தேவை என்றால் உடனே விண்ணப்பியுங்கள்!
திருவாரூர் மாவட்ட சத்துணவு மையங்களில் வேலை வாய்ப்பு! | பள்ளி சத்துணவு மையங்களில் 11 சமையல் உதவியாளர் பணியிடங்கள் – நேரடி நியமனம்
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் செயல்படும் சத்துணவு மையங்களில் காலியாக உள்ள சமையல் உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
மொத்தம் 11 பணியிடங்கள் நேரடி நியமனம் அடிப்படையில் நிரப்பப்படுகின்றன.
இந்த வேலைக்கு தேவையான தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் 31.12.2025க்குள் விண்ணப்பிக்கலாம்.
அரசு வேலை தேடும் நபர்களுக்கு இது ஒரு சிறந்த வாய்ப்பு!
சமையல் உதவியாளர் வேலை வாய்ப்பு | 10-ம் வகுப்பு தகுதி | 11 காலியிடங்கள் | சம்பள விவரம்
பதவி பெயர்: சமையல் உதவியாளர்
காலியிடங்களின் எண்ணிக்கை: 11
கல்வித் தகுதி:
இந்த சமையல் உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
மேலும் தமிழில் எழுதவும், படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும்.
வயதுத் தகுதி:
-
பொது மற்றும் தாழ்த்தப்பட்டோர்: 21 முதல் 40 வயது வரை
-
பழங்குடியினர்: 18 முதல் 40 வயது வரை
-
விதவை / கணவரால் கைவிடப்பட்ட பெண்கள்: 20 முதல் 40 வயது வரை
சம்பளம்:
-
தொடக்கத்தில் தொகுப்பூதியம் ரூ. 3,000
ஒரு ஆண்டு நிறைவடைந்த பின் ரூ. 3,000 – ரூ. 9,000 வரை சம்பள உயர்வு
தேர்வு செய்யப்படும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://cdn.s3waas.gov.in/s3e46de7e1bcaaced9a54f1e9d0d2f800d/uploads/2025/12/17659531942005.pdf என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து பிரிண்ட் எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களுடன் தொடர்புடைய ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களுக்கு அனுப்ப வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 31.12.2025
இந்த வேலை வாய்ப்பு தொடர்பாக மேலும் விபரங்கள் அறிய கீழே கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பினைப் பார்வையிடவும்.
sathunavu amaipalar vacancy 2025, TN Sathunavu Amaipalar jobs 2025, Sathunavu Amaipalar recruitment 2025, Tamil Nadu Sathunavu Amaipalar recruitment, Sathunavu Amaipalar cook assistant jobs, Sathunavu Amaipalar application dates, Sathunavu Amaipalar offline apply, Sathunavu Amaipalar vacancies list, Sathunavu Amaipalar district wise vacancies, Sathunavu Amaipalar 8101 posts, Sathunavu Amaipalar notification 2025, Sathunavu Amaipalar eligibility criteria, Sathunavu Amaipalar last date 2025, Sathunavu Amaipalar govt job Tamil Nadu, சத்துணவு அமைப்பாளர் வேலைவாய்ப்பு 2025, சமையல் உதவியாளர் வேலை TN, TN govt job Sathunavu Amaipalar.
No comments:
Post a Comment